நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் கண்காணிப்பு அறை மற்றும் தேர்தல் தொலைப்பேசி பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மற்றும் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான கோவை அரசினர் பொறியியல் கல்லூரியிலும் ஆய்வு மேற்கொண்டார். அருகில் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைகள்) கோவிந்தராஜூலு, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாநகர காவல் துணை ஆணையர் சரவணன்பாலாஜி, மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னாராமசாமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) நாராயணன், (சத்துணவு) முருகேசன், (கணக்குகள்) ஷேஷாத்திரி, உட்பட பலர் உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
