கோவை அவினாசி சாலையில் (அண்ணா சிலை அருகே, பழமுதிர் நிலையத்தின் மேல்) 1045, ஸ்ரீமத் ஸ்ரீவாரி டவர்சின் 5வது மாடியில் அமைந்துள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மருத்துவமனை சார்பில் வரும் 2019 பிப்ரவரி 17ஆம் தேதி மாபெரும் நீரிழிவு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்துள்ளது.
27 வருடங்களாக நாட்டின் முன்னணியில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம், மக்களிடம் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறது.
இது குறித்து டாக்டர் மோகன்ஸ் கோவை கிளையின் நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் சுகுணப்பிரியா மற்றும் டாக்டர். ரவி கண்ணன் ஆகியோர் கூறுகையில் “நீரிழிவு நோய் தற்போது நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகி உள்ளது. தமிழகத்தில் சற்றேறக்குறைய 25% மக்களுக்கு நீரிழிவு உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், நீரிழிவு நோய் பலராலும் அலட்சிய படுத்தப்படுகிறது. இந்நோய் கவனிக்கப்படாவிடில் கண்கள், கால்கள், இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் அபாயம் உள்ளது.
மருத்துவரின் அறிவுரை, சரியான மருந்துகள், முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலமே இந்நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும், நீரிழிவு நோய் மற்றும் அதன் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒரே மாதிரியான மருத்துவ பரிந்துரை அனைவருக்கும் பொருந்தாது. எனவே, ஒவ்வொருவரும், மருத்துவரை அணுகி, பரிசோதனைகள் செய்து தங்கள் நோயின் தன்மைக்கேற்ப அறிவுரைகள் பெற வேண்டியுள்ளது”.
மேலும் அவர் கூறுகையில் “மேற்குறிப்பிட்ட பல்வேறு பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கவும், நீரிழிவு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் மேம்படுத்தவும், டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 1 மணி வரை இலவசமாக பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை மற்றும் உணவு முறை ஆலோசனைகள் நடத்த உள்ளோம். கோவை மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த முகாமில் ஆலோசனைகள் பெற 0422 425 8888, 2222880 & 99400 02947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.” இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.