பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை கண்காணிக்க, கோவை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 10 லட்சத்து, 4 ஆயிரத்து 532 ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, ஐந்து கிராம் ஏலக்காய், இரண்டடி நீள கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
கூடுதல் பரிசாக, இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெரிசலை தவிர்க்க பயனாளிகள் அட்டவனை தயாரித்து முன்கூட்டியே அறிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்பணியை கண்காணிக்க, தனி கட்டுப்பாட்டு அறை கோவையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 0422 – 2300569 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
பரிசு தொகுப்பு வினியோகத்தில் புகார் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
மாவட்ட வழங்கல் அலுவலர் – 94450 00245
முதுநிலை மண்டல மேலாளர் – 94433 58874
இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் – 73387 20301
துணை பதிவாளர் பொ.வி.தி., – 93626 13765
உதவி பங்கீட்டு அலுவலர் சரகம் 1 – 94450 00250
உதவி பங்கீட்டு அலுவலர் சரகம் 2 – 94450 00249
உதவி பங்கீட்டு அலுவலர் சரகம் 3 – 94450 00248
தனி தாசில்தார், கோவை வடக்கு – 94450 00246
தனி தாசில்தார், கோவை தெற்கு – 94450 00247
தனி தாசில்தார், அன்னூர் – 99408 80903
வட்ட வழங்கல் அலுவலர், சூலூர் – 94450 00406
வட்ட வழங்கல் அலுவலர், மேட்டுப்பாளையம் – 94450 00251