கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷ்னர் மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷ்னராக பணி புரிந்த பெரியய்யா மேற்கு மண்டல ஐ ஜி யாக நியமிக்கப்பட்டார். சென்னை அமலாக்க பிரிவு ஐ ஜி யாக பணி புரிந்த சுமித் சரண் கோவையின் புதிய கமிஷ்னராக நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்று கொண்ட இவர், நிருபர்களுக்கு கூறியதாவது.
மாநகரில் போக்குவரத்து மற்றும் குற்றச்செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
பணமில்லா பரிவர்த்தனை தொடர்பான குற்ற செயல்கள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாணவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்பவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதி மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் 100% மின்னணு முறையில் அபராதம் வசூலிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டு தனிக்கவனம் செலுத்தப்படும் என்று புதிய போலீஸ் கமிஷ்னர் சுமித் சரண் அவர்கள் கூறினார்.