கோவை மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதன்படி, கோவை மாவட்டத்தில் பருவ மழையை எதிர்நோக்கி, அனைத்து வட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளைக் கண்காணிக்கவும், மழையால் பாதிப்பு ஏற்படும்போது தேவையான பணிகளை கண்காணிக்கவும் ஒவ்வொரு வட்டத்துக்கும் துணை ஆட்சியர் நிலையிலான கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வட்டாட்சியரால் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்க, உடனடியாக நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் 1077 என்ற தொலைபேசி கட்டணமில்லா எண்ணில் மக்கள் தொடர்பு கொண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்காணிப்பு அலுவலரை தொடர்பு கொள்ள:
கோவை தெற்கு வட்ட கண்காணிப்பு அலுவலரை 9445000245, 0422-2300569 என்ற எண்களிலும், கோவை வடக்கு அலுவலரை 0422-2301171, 9952648475, மேட்டுப்பாளையம் அலுவலரை 9442144401, 0422-2644450, அன்னூர் அலுவலரை 9445029457, 0422 2240111, வால்பாறை அலுவலரை 9443677077, 0422-2300965, பேரூர் அலுவலரை 9445000442, 0422 2300424, மதுக்கரை அலுவலரை 9443052049, 0422-2301114, கிணத்துக்கடவு அலுவலரை 9940765615, 0422-2303778, பொள்ளாச்சி அலுவலரை 9445000445, 04259-224855, சூலூர் வட்ட கண்காணிப்பு அலுவலரை 9442479876, 0422-2300404 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சி தலைவர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.