வள்ளலார் தினம்

2019-ம் ஆண்டு 21.01.2019 அன்று “வள்ளலார் தினம்” கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
அறைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனுர் மாடு அறுவைமனைகள் மற்றும் துடியலூரில் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment